புது தில்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விடுப்பை மீண்டும் நீட்டித்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பட்ஜெட் கூட்டத்தொடர் நேரத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி 2 வார கால விடுப்பில் சென்றார். அவர் பாங்காக்கில் ஓய்வு எடுப்பதாக காங்கிரஸ் தெரிவித்தது. ஆனால், ராகுல் காந்தி பாங்காக்கில் இல்லை உத்தரகண்ட் மாநில மலைப்பகுதியில் தான் உள்ளார் என்று கூறி அதற்கான புகைப்படத்தையும் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் வெளியிட்டார். இந்நிலையில் ராகுல் விடுப்பு முடிந்து திங்கட்கிழமை தில்லி திரும்பியிருக்க வேண்டும். ஆனால் அவர் திரும்பவில்லை. இந்நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தியை கண்டுபிடித்துத் தர ஒருவர் மனு செய்து, அது விசாரணைக்கு உகந்ததல்ல என்று தள்ளுபடி ஆனது. அப்போது, ராகுல் விடுப்பை நீட்டித்துள்ளதாகவும் இந்த வார இறுதியில் அவர் தில்லிக்குத் திரும்புவார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் ராகுல் விடுப்பை மீண்டும் நீட்டித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவர் இந்த மாத இறுதியில் தான் தில்லி திரும்புவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. கட்சியில் பழைய ஆட்களைக் களை எடுத்து, புதிய நபர்களை அதிகம் சேர்க்க விரும்புகிறார் ராகுல் என்று கூறப்பட்டது. மேலும், கட்சியை புதுப்பிப்பது குறித்து சிந்தித்து புதிய திட்டங்கள் தீட்டி வரவே ராகுல் விடுப்பில் சென்றுள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.
தில்லி திரும்ப மனம் இல்லை?: விடுப்பை மேலும் நீட்டித்த ராகுல்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari