muslim prayer - 2026

அதிர்ச்சி: அல்லா சிறந்த கடவுள்‌.. இந்து மாணவர்களை நமாஸ் செய்ய வற்புறுத்திய ஆசிரியர்!

சற்றுமுன் இந்தியா கல்வி கிரைம் நியூஸ்
muslim prayer - 2026

பெற்றோர் ஒருவர் வெளியிட்ட வீடியோ ட்விட்டரில் வைரலானதை அடுத்து, பெங்களூருவில் உள்ள ஆர்க்கிட் தி இன்டர்நேஷனல் பள்ளி, அந்த பெற்றோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

ஒரு கணித வகுப்பின் போது பள்ளியின் ஆசிரியர் ஒருவர் மாணவர்களை அல்லாவிடம் பிரார்த்தனை செய்யும்படி கூறியதாக காட்டும் அந்த வீடியோ வைரலானது.

parent - 2026

பி.டி.எம் லேஅவுட்டில் அமைந்துள்ள பள்ளி, புதன்கிழமை இந்த சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியது. பள்ளி சார்பில் ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டது.

“நிர்வாகம் பெற்றோரிடம் விரிவாகப் பேசியது. குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை நடந்தது. சிசிடிவி காட்சிகள் சரிபார்க்கப்பட்டன.

பள்ளியின் அறிக்கையின்படி, பள்ளி குற்றச்சாட்டை விசாரித்து, அந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில், ஆசிரியர் தவறாக குற்றம் சாட்டப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இந்த வீடியோ செவ்வாயன்று ட்விட்டரில் வெளியிடப்பட்டது. பின்னர் இந்த வீடியோ புதனன்று வைரல் ஆனது. அந்த வீடியோவில், பி.டி.எம் லேஅவுட்டில் உள்ள ஆர்க்கிட் தி இன்டர்நேஷனல் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி, தனது ஆசிரியர், அல்லாவிடம் பிரார்த்தனை செய்யும்படி மாணவர்களை வற்புறுத்தியதாக கூறியுள்ளார். இதை மாணவர்களின் பெற்றோர் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

school - 2026

அல்லா தான் பெட்டர் கடவுள் என்று கூறி ஒரு கிண்ணத்தின் வடிவத்தில் எங்கள் கைகளை வைத்து, பின், கைகளை எங்கள் கண்களுக்கு மேல் வைக்கும்படி அவர் எங்களிடம் கூறினார். நாங்கள் அப்படி செய்யவில்லை என்றால், அவர் கத்துவார்” என்று குழந்தை வீடியோவில் குற்றம் சாட்டியுள்ளது.

“வீடியோவில் கூறப்பட்டுள்ள கண் உள்ளங்கை உடற்பயிற்சி, ஆன்லைன் வகுப்பு அமர்வுகளின் போது நடத்தப்படும் இரண்டு நிமிட கண் உடற்பயிற்சி (TMEE) ஆகும்” என்று பள்ளி விளக்கம் அளித்தது.

ஆனால் மாணவி கண்பயிற்சிக்கும் ஆசிரியர் வற்புறுத்தி செய்ய சொல்லியதிற்கும் வித்தியாசத்தை நன்கு விளக்குகிறாள். ஆனால் பள்ளி நிர்வாகம் ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக பெற்றோரை குற்றம் சாட்டியுள்ளது, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய இறையாண்மைக்கு எதிரான, மற்ற மத கடவுளை வணங்குமாறு வற்புறுத்தும் இந்த செயல் கண்டத்திற்கு உள்ளானது.

இந்த வீடியோ வைரலானதையடுத்து, சிலர் பள்ளிக்கு சென்று அந்த ஆசிரியரை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

https://twitter.com/vsimha/status/1478763192478093313?ref_src=twsrc%5Etfw

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.