மாணவர்களின் கழுத்தில் இருந்த ருத்ராட்ச மாலையை அறுத்த ஆசிரியர்கள்!

Published:

school 1 - 2026

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெய்யார் அரசினர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்கள் கழுத்தில் ருத்ராட்சம் அணிந்து வந்துள்ளனர். இந்தநிலையில் இந்தப் பள்ளியில் பணியாற்றும் வரலாறு ஆசிரியர் மற்றும் அறிவியல் ஆசிரியர் ஆகிய இரண்டு ஆசிரியர்கள் மாணவர்களைப் பார்த்து ருத்ராட்சம் அணிந்து வரக்கூடாது, என்றும் நெற்றியில் பொட்டு வைக்க கூடாது, தலையில் பூ வைக்கக்கூடாது என்று கூறியுள்ளனர் இது சம்பந்தமாக பள்ளி மாணவர்கள் வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் கூறியுள்ளனர்.

இதையடுத்து மாணவர்களின் பெற்றோர்கள் கடந்த 3ஆம் தேதி தலைமை ஆசிரியரிடம் சென்று பள்ளியை சேர்ந்த 2 ஆசிரியர்கள் மாணவர்களை ருத்ராட்சம் அணிந்து வரக்கூடாது என்றும் நெற்றியில் பொட்டுவைக்க கூடாது என கூறியுள்ளார். இதற்கு இரண்டு ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கூறியுள்ளனர்.

இதற்கு தலைமையாசிரியர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை விசாரணை செய்யாமல், இந்த சம்பவம் பற்றி மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்காமலும் ஆசிரியர்கள் மீது எந்த விதமான நடவடிக்கை எடுக்காமலும், அலட்சியம் காட்டியுள்ளார்.

அதனை தொடர்ந்து நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற 10ஆம் வகுப்பு மாணவர்களை இரண்டு ஆசிரியர்கள் மீண்டும் அழைத்து மாணவர்களின் கழுத்தில் இருந்த ருத்ராட்ச மாலையை அறுத்ததாக கூறப்படுகிறது.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

இதையடுத்து தகவலறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்குச் சென்று இரண்டு ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளியை முற்றுகையிட்டனர்.

vanthavasi school - 2026

மேலும் தலைமை ஆசிரியரிடம் புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் ஒரு தலைபட்சமாக நடந்தால் மட்டுமே இந்த பிரச்சினை ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வந்தவாசி டிஎஸ்பி விஸ்வேஸ்வரய்யா மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம் இது குறித்து நாங்கள் புகார் அளித்தோம் ஆனால் அவர் இதுவரையில் அந்த ஆசிரியர்களிடம் விசாரணையும் செய்யவில்லை தலைமை ஆசிரியர் ஒருதலைபட்சமாக நடந்துக்கொண்டதால் எங்களுடைய பிள்ளைகளின் கழுத்தில் இருந்து ருத்ராட்சத்தை அறுத்துள்ளனர்.
மேலும் 2 ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

இதையடுத்து ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பள்ளி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருட்செல்வன் கூறுகையில், தெய்யார் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் குறித்து தகவல் வந்தது. நான் வெளியூரில் இரண்டு நாட்களாக பயிற்சியில் உள்ளேன்.

இது குறித்து என்னால் விசாரணை செய்யமுடியவில்லை. இந்த சம்பவம் குறித்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடமும் விசாரணை செய்ய மாவட்ட கல்வி அலுவலரிடம் கூற உள்ளேன், இந்த சம்பவம் பற்றி விசாரணை இரண்டு நாட்களில் முடிந்து விடும் யார்மீது தவறு என்று தெரிந்து விடும் அதன் பிறகு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Related articles

Recent articles

spot_img