முட்டைக்காக சீறிய பாம்பு… கொத்தி துரத்தும் கோழி!

Published:

snake 4 - 2026

கோழி ஒன்று அடைக்காத்து கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த பாம்பையே கொத்தி விரட்டியடித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தற்காலத்தில் சமூக வலைதளங்களில் விலங்குகள், பறவைகள் குறித்த வீடியோக்கள் பெருமளவில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது தாய்க்கோழியின் சுவாரசியமான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கோழி ஒன்று அடைகாத்துக் கொண்டிருந்த போது அங்கு பயங்கர பாம்பு ஒன்று வந்துள்ளது. இந்நிலையில் தனது முட்டைகளை காப்பாற்ற எண்ணிய அந்த கோழி சிறிதும் அச்சப்படாமல் அந்த பாம்புடன் சண்டை போடுகிறது.

பாம்பு முட்டையை எடுக்க வாயை திறக்கும் போதெல்லாம், கோழி சிறிதும் தயங்காமல் அதனை கொத்தியுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Related articles

Recent articles

spot_img