perumal - 2026

சாத்தூரில் வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம்!

சற்றுமுன் ஆலயங்கள் தமிழகம்
perumal - 2026

விருதுநகர் அருகே வெங்கடேச பெருமாள் கோயில் திருக்கல்யாண உற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
திரளான உள்ளூர், வெளியூர் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. இங்கு பெருமாளுக்கு உகந்த நாட்களில் சிறப்பு விழாக்கள் மற்றும் வைபவங்கள் நடைபெறுவது மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இந்நிலையில், மாசிமாதம் பூசம் நட்சத்திரத்தை முன்னிட்டு சாத்தூரில் வீற்றிருக்கும் ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பட்டாச்சார்யர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பு யாக வேள்வி நடத்தி சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்து திருக்கல்யாண வைபவம் நடத்தினர்.

இந்நிகழ்ச்சியில் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.