2.0 படத்தை இணையத்தில் வெளியிடுவோம் என்று கூறிய டிவிட்டர் பக்கம் தங்களுடையது அல்ல என தமிழ் ராக்கர்ஸ் விளக்கம் அளித்துள்ளது.
சர்கார் படத்தை அடுத்து, நடிகர் ரஜினிகாந்தின் 2.0 திரைப்படத்தையும் இணையத்தில் வெளியிடுவோம் என்று அறிவித்த அந்த டிவிட்டர் பக்கம் எங்களுடையது இல்லை என்று தமிழ் ராக்கர்ஸ் தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.
டுவிட்டர் அல்லது வேறு எந்த சமூக வலைதளத்திலும் தாங்கள் இல்லை என்றும், தங்கள் பெயரில் வெளியாகும் கருத்துகள் பொய்யானது என்றும் தமிழ் ராக்கர்ஸ் இணைய தளத்தில் பதிவிடப்பட்டிருக்கிறது.





