தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமானவரி சோதனை

சற்றுமுன் தமிழகம்

IT Rais - 2026

சென்னை மற்றும் நாமக்கல்லில் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான 7 இடங்களிலும், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக என்ற கோணத்தில் சென்னையில் 10 இடங்களிலும், நெல்லையிலும் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை உள்ளிட்ட தமிழக அளவில் அரசு ஒப்பந்த கட்டிட நிறுவனமான பிஎஸ்கே குருப் ஆப் கம்பெனியில் வருமான வரி துறை சோதனை நடைபெற்று வருகின்றன.

நாமக்கல் பிஎஸ்கே உரிமையாளர் பெரியசாமி வீடு, அலுவலகம், நூல் மில் கல்லூரி ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகின்றன.

மேலும் பெரியசாமியின் மகன்கள் அருண்குமார், அசோக் குமார் ஆகியோர் நிர்வகிக்கும் கொங்குநாடு பொறியியல் கல்லூரி மற்றும் சரண்யா மில் ஆகிய இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது.

மேலும் அவரது பண்ணை வீடு, சேலம் சாலையில் உள்ள அலுவலகம், மோகனூர் சாலையில் உள்ள வீடு ஆகிய இடங்களில் வருமான வரி சோதனை நடந்து வருகின்றன.

இந்த பெரியசாமி ஏற்கனவே அரசு ஒப்பந்ததாரரான அமைச்சர் விஜயபாஸ்கர் நண்பர் என கூறப்படும் சுப்ரமணியுடன் சேர்ந்து பல பொதுத்துறை கட்டடங்கள் மற்றும் நீதித்துறை கட்டங்களை கட்டியுள்ளார்.

ஏற்கனவே வீடுகளில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சோதனை நடைபெற்றது. அதன் பிறகு அவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வழக்கு CBCID விசாரணையில் நிலுவையில் உள்ளது. அவரது நண்பராகவும் பங்குதாரராகவும் பெரியசாமி இருந்து வருவது குறிப்பிடதக்கது.

மேலும் வங்கி கணக்கு மூலம் வாக்காளர்களுக்கு பைனான்சியர்கள் பணப்பட்டுவாடா செய்வதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக நெல்லையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.