
விருதுநகரில் அனுமதி பெறாமல் பாரத மாதாவின் சிலையை தங்களது அலுவலகத்துக்குள் வைத்ததாகக் கூறி, பாஜக., அலுவலகத்துக்குள் புகுந்து நேற்று இரவு போலீஸார் அந்த சிலையை எடுத்துச் சென்றனர்.
பாஜக அலுவலகத்தில் சுவர் ஏறிக் குதித்து பாரத அன்னையின் சிலையை திருடிச் சென்றுள்ளது விருதுநகர் காவல்துறை. அமைச்சர் @TThenarasu மற்றும் KKSSR இருவரும் சேர்ந்து காவல்துறையை திருடர்களை போல செயல்பட வைத்திருக்கின்றனர்… என்று குற்றம் சாட்டுகின்றனர் பாஜக.,வினர்.
இது தொடர்பாக கருத்தும் கண்டனமும் தெரிவித்துள்ள பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமது சமூக வலைத்தளப் பகிர்வில் தெரிவித்திருப்பதாவது…
விருதுநகர் தமிழக பாஜக மாவட்ட அலுவலகத்தில் நிறுவப்பட்டிருந்த பாரத அன்னையின் சிலையை சுவர் ஏறிக் குதித்து காவல்துறையினர் நேற்று இரவு அப்புறப் படுத்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊழல் திமுக ஆட்சியில், ஒரு கட்சிக்கு சொந்தமான இடத்தில் பாரத அன்னைக்கு சிலை வைப்பதற்குக் கூட உரிமை இல்லாத சூழலே நிலவி வருகிறது.
ஊழல் திமுக அரசின் அவலங்களை எங்கள் #EnMannEnMakkal யாத்திரையின் மூலமாக மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதால் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் அச்சத்தின் உச்சியில் இருப்பதன் வெளிப்பாடே இந்த நடவடிக்கை. பாரத அன்னையின் புகழ் ஓங்குக!