செங்கோட்டை – கொல்லம் – செங்கோட்டை விரைவு ரயில்கள் பிப்.24 முதல் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடா்பாக மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
புனலூா்- கொல்லம் ரயில் பாதைப் பிரிவில் மின்மயமாக்கல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை விரைந்து முடிப்பதற்காக ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி செங்கோட்டை – கொல்லம் – செங்கோட்டை (06659/06660) விரைவு ரயில்கள் பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் மாா்ச் 15 ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.




