ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 54வது ஜெயந்தி விழா.. காமாட்சி அம்மனுக்கு 36 வகை அபிஷேகங்கள்!

Published:

vijeyantra saraawathi swamikal - 2026

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 54வது ஜெயந்தி விழாவையொட்டி, காஞ்சி காமாட்சி அம்மனுக்கு நேற்று, 36 வகை அபிஷேகங்கள் நடைபெற்றன.

காஞ்சிபுரத்தில் உள்ள சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 54வது ஜெயந்தி விழா நேற்று காஞ்சிபுரத்தில் நடந்தது.

இதையொட்டி, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், நேற்று காலை, ‘சவுபாக்ய சிந்தாமணி’யில் சொல்லியுள்ளது போல், வாசனை திரவியங்கள், நறுமண பொருட்கள், பழ வகைகள் என, 36 வகையான அபிஷேக பொருட்களால், காமாட்சி அம்மனுக்கு விசேஷ அபிஷேகங்கள் நடைபெற்றன.

இதில், கிராம்பு, வால் மிளகு, கோஷ்டம், வெட்டிவேர், வசம்பு, மஞ்சள், மஞ்செட்டி, சம்பகம், சீந்தில், விஷ்ணுக்ராந்தி, துளசி, வில்வம், சாமை அரிசி, காட்டு அரிசி, ரக்தசந்தனம், வெண்கடுகு, ஏலக்காய், அதிமதுரம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்றன.

அத்துடன், பால், தயிர், நெய், தேன், இளநீர், கரும்புச்சாறு, பானகம், பொடிவெல்லம், ரஸ்தாளி, மலைவாழை, செவ்வாழை, சிறுபயிறுடன் நீர், தர்ப்பையுள்ள நீர், ரத்னங்களுள்ள நீர், புஷ்பங்களுள்ள நீர், சந்தனம் கலந்த நீர், அக்க்ஷதை கலந்த நீர், சங்கு நீர் என, 36 வகையான விசேஷ பொருட்களால், அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

Related articles

Recent articles

spot_img