12 எம்எல்ஏக்களை காணவில்லை: காங்கிரஸ்

Published:

09 May16 congress - 2026பெங்களூருவில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்துவரும் நிலையில் 12 எம்எல்ஏக்களை காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற 78 எம்எல்ஏக்களில் 66 பேர் மட்டுமே காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், பாஜக-வுடன் கூட்டணி இல்லை என மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி திட்டவட்ட அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், மதசார்பற்ற ஜனதா தளத்தின் எம்எல்ஏக்கள் 2 பேர் மாயம் என தகவல் வெளியாகியுள்ளது. ராஜவெங்கடப்பா நாயக்கா, வெங்கட ராவ் ஆகியோர் எம்எல்ஏ கூட்டத்திற்கு வரவில்லை. குமாரசாமி தலைமையில் மஜத எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சி என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

Related articles

Recent articles

spot_img