கோவா மாநில 10-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நேரு படம் நீக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கோவா மாநில 10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், நேரு படம் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக ஆர்.எஸ்.எஸ்., இணை நிறுவனரும், சுதந்திர போராட்ட வீரருமான விநாயக் சவர்க்கார் படம் இடம்பெற்றுள்ளது. இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக புத்தகத்தின் 68-வது பக்கத்தில் மகாத்மா காந்தி, மவுலானா ஆசாத்துடன் நேரு அமர்ந்திருக்கும் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இதனுடன் சேர்த்து மேலும் ஒரு நேருவின் புகைப்படமும், புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
பாடப்புத்தகத்தில் நேரு படம் நீக்கம்: காங்கிரஸ் எதிர்ப்பு
Popular Categories



