காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முதலில் திருமணம் செய்துகொண்டு பின்னர் தங்களை கட்டியணைக்கலாம் என பாரதீய ஜனதா கட்சி எம்.பி. ஒருவர் கிண்டலாக தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் பிரதமர் மோடியை ராகுல்காந்தி கட்டியணைத்தது குறித்து பாரதீய ஜனதா கட்சியினர் தொடர்ந்து விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் கட்டியணைக்கக் கூடும் என்று அஞ்சி பாரதீய ஜனதா கட்சி எம்.பிக்கள் பின்வாங்குவதாக ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள பாரதீய ஜனதா கட்சி எம்.பி. நிஷிகாந்த் துபே, ராகுல்காந்தியால் கட்டியணைக்கப்படும் தலைவர்களை அவர்களது மனைவிகள் விவாகரத்து செய்துவிடுவார்கள் என்று தெரிவித்துள்ளார். ஓரினச்சேர்க்கைக்கு எதிரான 377-வது சட்டப்பிரிவு இன்னும் கைவிடப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராகுலால் கட்டியணைக்கப்படும் தலைவர்களை அவர்களது மனைவிகள் விவாகரத்து செய்துவிடுவார்கள்: எம்பி சர்ச்சை பேச்சு
Popular Categories



