திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி தொலைபேசியில் விசாரித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “கருணாநிதி விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாக”வும் “என்ன உதவி தேவைப்பட்டாலும் செய்ய தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், உடல்நலம் குன்றியுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்திப்பதற்கு நேற்று இரவு பல்வேறு தலைவர்கள் அவருடைய கோபாலபுரம் இல்லத்திற்கு வந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரிப்பதற்காக இன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருணாநிதி உடல்நலம் பற்றி விசாரிப்பதற்காக இன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகம் வருகை?
Popular Categories



