teacher - 2026

இதை முடிக்க வேண்டும்: ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அமைச்சர் உத்தரவு!

சற்றுமுன் கல்வி தமிழகம்
teacher - 2026

தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு மார்ச் மாத இறுதிக்குள் பாடங்கள் முழுவதும் நடத்தி முடிக்க வேண்டுமென பள்ளிகல்வித்துறை அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை பொதுத்தேர்வு கால அட்டவணையை மார்ச் 2-ஆம் தேதி வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளதாவது, 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு வருகிற ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கி மே 2-ம் தேதி முடிவடைய உள்ளது.

அதேபோல் பொது தேர்வும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மே 5 முதல் மே 28 வரையும் மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு மே 9 முதல் மே 31 வரை நடத்தப்படுகிறது. மேலும் மே 6ஆம் தேதி தொடங்கி மே 30-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது.

எனவே இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மார்ச் மாதம் இறுதிக்குள் பாடங்களை முழுமையாக நடத்தி முடிக்கப்பட வேண்டும் என பள்ளிகளுக்கு உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எவ்வித கவலையும் இன்றி மனமகிழ்வுடன் பயமின்றி படித்து தேர்வெழுத வேண்டும். அவ்வாறு மனநிறைவுடன் தேர்வெழுதி தங்களது குறிக்கோளை அடைய வேண்டும் என்று கூறிய அமைச்சர், கொரோனா காரணமாக பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், மார்ச் மாத இறுதிக்குள் பாடத்திட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டு ஏப்ரல் மாதத்தில் திருப்புதல் தேர்வு நடைபெற்ற பிறகு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.