gallerye 10181170 2979720 2 - 2026

வருகிறது ஜனாதிபதி தேர்தல்..

சற்றுமுன்

நான்கு மாநில தேர்தல் வெற்றி, பாஜ.வுக்கு மிகப்பெரிய சாதகமாகி இருப்பதால் தொடர்ந்து நிகழவிருக்கும் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல் வெற்றி பாஜகவுக்கு சாதகமாக அமையும்.

நடந்து முடிந்த 5 மாநில தேர்தலை தொடர்ந்து, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல்களும், காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல்களும் அடுத்தடுத்து நடக்க உள்ளன. அதனால், இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜ.வுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்பட்டது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ம் தேதி முடிகிறது. எனவே, புதிய ஜனாதிபதி விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளார். மாநிலங்களவையை சேர்ந்த 223 எம்பி.க்கள், மக்களவையின் 543 எம்பி.க்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் 4,120 பேர் வாக்களித்து, ஜனாதிபதியை தேர்வு செய்வார்கள். இவர்களின் மொத்த வாக்கு எண்ணிக்கை 10 லட்சத்து 98 ஆயிரத்து 903.

gallerye 10181170 2979720 2 - 2026

போட்டி இருக்கும் பட்சத்தில், மொத்த வாக்குகளில் 50 சதவீதத்தை பெறுபவரே புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவார். உபி தேர்தலில் சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றிருந்தால்  பொதுவேட்பாளராக நிறுத்தும் திட்டம் நனவாகி இருக்கும். இப்போது, அதற்கு வாய்ப்பு குறைந்து  விட்டது. இந்த நான்கு மாநில தேர்தல் வெற்றி, பாஜ.வுக்கு மிகப்பெரிய சாதகமாகி இருக்கிறது.ஜனாதிபதி துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக முன்நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெறுவார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.