spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?ஏடிஎம், நெட்பேங்கிங் வாடிக்கையாளர்களுக்கு.. SBI எச்சரிக்கை மெசேஜ்!

ஏடிஎம், நெட்பேங்கிங் வாடிக்கையாளர்களுக்கு.. SBI எச்சரிக்கை மெசேஜ்!

- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் நிதி பாதிப்புகள் குறையும் வகையில் பல முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறிப்புகளை இணையத்தில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறது.

அந்த வகையில், SBI வங்கி சமீபத்தில், எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் ஏடிஎம் பாதுகாப்பை உறுதிப்படுத்த சில குறிப்புகளைப் பகிர்ந்துள்ளது.

உங்கள் ஏடிஎம் பாதுகாப்பை உறுதிப்படுத்த 5 உதவிக் குறிப்புகளை நீங்கள் எப்போதும் பிறப்பற்ற வேண்டும் என்று SBI அறிவித்துள்ளது.

நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு செயல்முறைகள் இதோ.

  1. ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் பரிவர்த்தனைகளைச் செய்யும்போது உங்கள் சுற்றுப்புறங்களில் கவனமாக இருப்பது சிறந்தது.
  2. உங்கள் கார்டு சரியாக ATM இயந்திரத்தில் வைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும் மற்றும் இயந்திரத்தில் அல்லது அதைப் பற்றி சந்தேகத்திற்குரிய சாதனம் எதுவும் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
  3. உங்கள் கையால் கீபோர்டை மறைத்து உங்கள் பின் நம்பரை உள்ளிடவும். யாரும் உங்கள் PIN நம்பரை பார்க்க முடியாத படி பார்த்துக்கொள்வது உங்களின் கடமையாகும்.
  4. உங்கள் PIN நம்பரை அவ்வப்போது மாற்றம் செய்வது மிகவும் பாதுகாப்பானது.
  5. உங்கள் வங்கி கணக்கு அறிக்கையைத் தொடர்ந்து கண்காணிப்பது பாதுகாப்பானது. வங்கி அறிக்கையில் ஏதேனும் திடீர் மாற்றம் இருந்தால் உடனே வங்கியை நேரில் சென்று அணுகவும்.

இதேபோல் சமீபத்தில், எஸ்பிஐ வங்கி அதன் ஆன்லைன் நெட் பேங்கிங் பயனர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பையும் வெளியிட்டிருந்தது.

அதிலும் சில முக்கிய பாதுகாப்பு விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றிப் பாதுகாப்பாக இருக்கும் படி SBI எச்சரித்திருந்தது என்பது கவனிக்கத்தக்கது.

எஸ்பிஐ ஆன்லைன் நெட் பேங்கிங் பாதுகாப்பைப் பலப்படுத்த இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதைப் பற்றித் தெளிவாகப் பார்க்கலாம்.

பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வங்கி வெளியிட்ட புதிய எச்சரிக்கை அறிவிப்பு
பாரத ஸ்டேட் வங்கி (SBI), சைபர் குற்றத்திலிருந்து தங்கள் வாடிக்கையாளர்களின் கணக்குகளைப் பாதுகாப்பதற்கான முக்கிய வழிமுறைகளைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

அதில், இந்தியாவின் மிகப்பெரிய வங்கி சேவையை வழங்கிவரும் SBI, தனது வாடிக்கையாளர்கள் வலுவான பாஸ்வோர்டுகளை பயன்படுத்துவது எவ்வளவு முக்கியமானது என்பதை விளக்கியுள்ளது.

வலுவான பாஸ்வோர்டுகளின் அவசியம் என்ன என்பதையும் பற்றி விளக்கம் அளித்துள்ளது.

உங்கள் பாஸ்வோர்டை தனித்துவமாகவும் வலுவானதுமாக மாற்ற எஸ்பிஐ கூறும் இந்த 8 செயல்முறையைப் பின்பற்றுங்கள். முதலில் உங்கள் பாஸ்வோர்டை யாராலும் உடைக்க முடியாத பலமான பாஸ்வொர்டாக மாற்றம் செய்ய சில முக்கிய விஷயங்களை நீங்கள் பின்பற்றியிருக்க வேண்டும்.

இதை நீங்கள் சரியாகச் செய்திருந்தால் சைபர் கிரைம் குற்றத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்று SBI கூறியுள்ளது. பாதுகாப்பு எச்சரிக்கையுடன் இருங்கள் என்று SBI வங்கி தனது டிவிட்டர் வழியாக #SafeWithSBI! என்று இந்த தகவலை ட்வீட் செய்தது.

எஸ்பிஐ ஆன்லைன் நெட் பேங்கிங் வாடிக்கையாளர்கள் பெரிய எழுத்து மற்றும் சிறிய எழுத்து ஆகிய இரண்டின் கலவையைப் பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு aBjsE7uG என்று கேப்ஸ் மற்றும் ஸ்மால் ஆங்கில எழுத்துக்களைச் சேர்த்துப் பயன்படுத்தவேண்டும்.

பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் எண்கள் மற்றும் சிம்பல்கள் இரண்டையும் பயன்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு AbjsE7uG61!@ என்பது போன்ற எண்கள் மற்றும் சிம்பல்கள் இரண்டையும் சேர்த்து பயன்படுத்துங்கள்.

போதுமான பாதுகாப்பை உறுதி செய்ய ஒருவர் குறைந்தபட்சம் 8 எழுத்துக்களைப் பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு aBjsE7uG என்று 8 எழுத்துக்களின் கலவையைப் பயன்படுத்தலாம்.

எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு பொதுவான அகராதி வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. உதாரணத்திற்கு இட்இஸ்லாக் (itislocked) அல்லது திஸ் இஸ் மை பாஸ்வேர்ட் (thisismypassword) என்று பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல என்று SBI கூறியுள்ளது.

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் “qwearty” அல்லது “asdfg” போன்ற மறக்கமுடியாத மற்றும் மிகவும் பொதுவான கீ-போர்டு பாதைகளைப் பயன்படுத்தக்கூடாது. SBI வாடிக்கையாளர்கள் 12345678 அல்லது abcdefg போன்ற வெளிப்படையான பாஸ்வோர்டுகளை வைத்திருக்கக்கூடாது என்று SBI வங்கி எச்சரித்துள்ளது.

இவை எல்லாம் மிகவும் எளிதான பாஸ்வோர்ட் என்பதனால் உங்கள் நெட் பேங்கிங் பாதுகாப்பு பலமானதாக இருக்காது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் DOORBELL அல்லது DOOR8377 போன்ற யூகிக்க எளிதான மாற்றுகளைப் பயன்படுத்துவதும் தவறானது. எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் பாஸ்வோர்டை நீண்டதாக வைத்திருக்க அறிவுறுத்துகிறது.

அதேபோல், நெட் பேங்கிங் பயனர்கள் அவர்களின் குடும்பம் தொடர்பான தகவல் மற்றும் பிறந்த தேதியுடன் பாஸ்வோர்டை உருவாக்க வேண்டாம் என்று அறிவுரைக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு Ramesh@1967 என்று பயன்படுத்தக் கூடாது.

இந்த 8 முக்கிய வழிமுறைகளைச் சரியாகப் பின்பற்றி உங்களின் நெட் பேங்கிங் பாஸ்வோர்டு தரத்தை மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் பயன்படுத்தும் பாஸ்வோர்டை இந்த அறிவுரைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து, உங்கள் பாஸ்வோர்ட் எவ்வளவு பலமானதாக உள்ளது என்பதைச் சோதனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.

SBI வெளியிட்டுள்ள இந்த பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிப்பைத் தனது வாடிக்கையாளர்கள் அனைவரும் விழிப்புடன் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று SBI தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe