nellai - 2026

திருக்குறளால் திருவள்ளுவர் ஓவியம்.. கவனம் ஈர்த்த நெல்லை மாணவி!

சற்றுமுன் அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் கல்வி நெல்லை
nellai - 2026

நெல்லையில் பள்ளி மாணவி ஒருவர் திருக்குறள் மூலம் திருவள்ளுவர் ஓவியம் வரைந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

நெல்லையில் 5-வது பொருநை புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில், மொழி, பண்பாடு, கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான ஓவியங்கள் மற்றும் கலை படைப்புகளும் இடம் பெற்றுள்ளன.

குறிப்பாக, மகாலட்சுமி என்ற மாணவி வரைந்துள்ள திருக்குறள் ஓவியம், பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 1,330 திருக்குறள் மூலம், திருவள்ளுவர் ஓவியத்தை வரைந்து கவனம் ஈர்த்துள்ளார் மகாலட்சுமி.

நெல்லை சங்கர் நகரைச் சேர்ந்த மகாலட்சுமி. 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கெரோனா ஊரடங்கு காலத்தை பயனுள்ளதாக மாற்றும் நோக்கில், ஓவியம் வரையப் பழகியுள்ளார்.

இதேபோல், அரசுப்பள்ளி ஆசிரியை தயாரித்த கையடக்க திருக்குறள் புத்தகமும், கண்காட்சியில் கவனம் பெற்றுள்ளது.

புதுக்குடி அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் பொன் ரேகா, பிராமி எழுத்துக்கள் மூலமாக திருக்குறளை கையடக்க புத்தகத்தில் எழுதியுள்ளார்.

திருக்குறளின் அவசியத்தை மாணவர்கள் மத்தியில் எடுத்துரைக்கும் நோக்கில், இந்த முயற்சியில் ஈடுபட்டதாக ஆசிரியை பொன்.ரேகா கூறியுள்ளார்.

புத்தகத் திருவிழாவுக்கு வருவோர் புத்தகங்களை வாங்கி தங்களுடைய அறிவை மேம்படுத்திக் கொள்வதோடு, திருக்குறள் ஓவியம், கையடக்க திருக்குறள் புத்தகம் போன்றவற்றை பார்க்கும்போது, இதுபோன்ற சாதனை படைக்க உந்து சக்தியாக விளங்கும் என்றால் அது மிகையல்ல.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.