ரூ400கோடியில் எக்மோர் ரயில் நிலையம் விரிவாக்கம்..!

சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் ரூ.400 கோடியில் நவீன படுத்தப்பட உள்ளது. பாரம்பரிய கட்டிடத்தின் நிலை மாறாமல் எழும்பூர் ரெயில் நிலையத்தின் முகப்பு தோற்றம் அதே வடிவில் நவீன தொழில் நுட்ப வல்லுனர்களால் புதுப்பிக்கப்பட உள்ளது.
சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் 750 மீட்டர் நீளம் கொண்டது ஆகும். இந்த ரெயில் நிலையத்தில் 11 நடைமேடைகள் உள்ளன. நடைமேடைகள் 1, 2, 3 குறைந்த நீளம் கொண்டது. இவை சிறிய ரக ரெயில்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. முக்கியமான 4-ம் நடைமேடை எழும்பூர் ரெயில் நிலையத்தின் மையப்பகுதியில் நீண்டுள்ளது. 5, 6, 7-ம் நடைமேடைகள் நீள ரக ரெயில்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

வேப்பேரி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 2-வது நுழைவுவாயில் ரூ.115.3 மில்லியன் செலவில் கட்டப்பட்டு, 2006ம் ஆண்டு ஜூன் மாதம் திறக்கப்பட்டது.

தினமும் 35 முக்கிய வழித்தடங்களுக்கு ரெயில்கள் மற்றும் 118 புறநகர் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் 1.5 லட்சம் பயணிகள் பயணம் செய்கிறார்கள். உணவகங்கள், கட்டணக் கழிப்பிடங்கள், உதவி மையங்கள், தங்கும் விடுதி என பல வசதிகள் இங்கு உள்ளன.

ALSO READ:  சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

சென்னை மாநகரின் முக்கிய ரெயில் நிலையமாக எழும்பூர் ரெயில் நிலையம் உள்ளது. இந்நிலையம், இந்தோ சாராசனிக் பாணியில் கட்டப்பட்டது. 1905-ம் ஆண்டு கட்டுமான பணி தொடங்கப்பட்டு, 1908-ம் ஆண்டு, ஜூன், 11- ந்தேதி திறக்கப்பட்டது.

இந்த ரெயில் நிலையம் பல்வேறு காலக்கட்டங்களில் தேவையான வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டு, தற்போது, 11 நடை மேடைகளுடன் இயங்கி வருகிறது. கொரோனா தாக்கத்துக்கு பின், எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து 28 ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையம் வழியாக 23 ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையத்தில் உள்ள புறநகர் மின்சார ரெயில் நிலையம் மற்றும் அருகில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையம் வழியாக தினமும் பல லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் எழும்பூர் ரெயில் நிலையம் ரூ.400 கோடியில் நவீன படுத்தப்பட உள்ளது. பாரம்பரிய கட்டிடத்தின் நிலை மாறாமல் எழும்பூர் ரெயில் நிலையத்தின் முகப்பு தோற்றம் அதே வடிவில் நவீன தொழில் நுட்ப வல்லுனர்களால் புதுப்பிக்கப்பட உள்ளது.

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

எழும்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கான பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. ஓய்வறைகள் வசதி அதிகரிக்கப்பட உள்ளது. நடைமேடைகள் புதுப்பித்து அமைக்கப்பட உள்ளன. பயணிகள் நடை மேம்பாலங்களின் தரம் உயர்த்தப்பட உள்ளன. புதிதாக லிப்ட் வசதி, நகரும் படிக்கட்டுவசதி நடைமேடையின் இருபகுதிகளிலும் அமைக்கப்பட உள்ளன.

மோட்டார் சைக்கிள், கார்கள் நிறுத்துவதற்காக அடுக்குமாடி வாகன நிறுத்தம் கட்டப்பட உள்ளது. ரெயில் நிலைய பாதுகாப்பு சுற்றுச்சுவர்கள், வடிகால் வசதிகள் மாற்றி அமைக்கப்பட உள்ளன. தண்ணீர் தேவைகளுக்கு புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட உள்ளன.

பூந்தமல்லி நெடுஞ்சாலை நுழைவு வாயில் பகுதியில், தேவையான கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. நுழைவு வாயிலும், வரவேற்பு வளைவும் புதிதாக அமைக்கப்பட உள்ளன. பார்சல் அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்களும் கட் டப்பட உள்ளன. இந்த புதிய திட்டபணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. 2 ஆண்டுகளில் அனைத்து பணிகளும் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

images 2022 03 26T153949.505 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories