திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோயில் தேரோட்டம்…

Published:

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில்
நரசிம்மரின் பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலையில் நரசிம்மர் சுவாமி தேரோட்டம் நடந்தது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நரசிம்மர் சுவாமி பிரம்மோற்சவ விழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 29-தேதி வரை நரசிம்மசுவாமி பிரமோற்சவ விழா நடக்கிறது.

 வைணவ திருத்தலங்களில் மிகவும் தொன்மை வாய்ந்த, ஆழ்வார்களால் போற்றி பாடப்பெற்ற திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், யோகநரசிம்மர் யோகநிலையில் மேற்கு நோக்கி நோய் தீர்க்கும் பெருமானாக எழுந்து அருள்பாலித்து வருகிறார்.

இக்கோயிலில் உள்ள யோக நரசிம்மரின் பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று நரசிம்மர் சுவாமி தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

 மாடவீதிகளில் நரசிம்மர் சுவாமிதேர் வலம் வந்து நிலையை அடைந்தது. வருகிற 29-ஆம் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
WhatsApp Image 2022 03 26 at 12.47 .25 PM - 2026
WhatsApp Image 2022 03 26 at 12.47 .34 PM - 2026

Related articles

Recent articles

spot_img