images 2022 03 31T095418.578 - 2026

தமிழக மீனவர்கள் 3 பேர் இலங்கை கடற்படையால் கைது … 

சற்றுமுன்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.  படகுடன் 3 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடிப்பது மற்றும் தாக்குவது, கைது செய்வது போன்ற அத்துமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒரு விசைப்படகுடன் 3 மீனவர்களையும் மயிலிட்டி துறைமுகத்துக்கு இலங்கை கடற்படையினர் கொண்டு சென்றனர்.
இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது நடவடிக்கையில் ஈடுபடுவதால் தமிழக மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

மேலும் இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைக்கு மத்திய, மாநில அரசுகள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்புன் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

images 2022 03 31T095418.578 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.