பிறந்தது பெண் குழந்தை.. ஹெலிகாப்டரில் அழைத்து வந்த தந்தை!

Published:

vishol - 2026

புனே பகுதியில் பெண் குழந்தை பிறந்த காரணத்தால் ஒரு தந்தை மகிழ்ச்சியடைந்து அந்த குழந்தையை ஹெலிகாப்டரில் வீட்டிற்கு அழைத்து வந்து அசத்தியிருக்கிறார்.

மராட்டிய மாநிலத்தில் உள்ள புனே மாவட்டத்தில் விஷால் ஜாரேக்கர் என்ற நபர் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த ஜனவரி 22 விஷாலுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனால் விஷால் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.

குழந்தை பிறந்த நாள் முதல் மனைவி அவரது தாய் வீட்டில் இருந்து வந்தார். அங்கிருந்து தங்களது வீட்டிற்கு விஷால் அந்த குழந்தையை வித்தியாசமான முறையில் அழைத்துவர வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

அவரது, திட்டப்படி கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி ஒரு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து தனது நாட்டிலிருந்து மகள் மற்றும் மனைவியை ஹெலிகாப்டரில் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

இந்த ஹெலிகாப்டர் தரை இறங்குவதற்கு ஏற்ற வகையில் தங்களது விவசாய நிலத்தில் தற்காலிக ஹெலிபேட் அமைத்திருந்தார்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

இவர்களது குடும்பத்தில் நீண்ட நாட்களுக்குப் பின் பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும் அந்த குழந்தைக்கு ராஜலட்சுமி என்று பெயர் வைத்துள்ளதாகவும் விஷால் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img