Mubarak - 2026

எட்டாம் வகுப்பு மாணவியை கடத்திய ஆங்கில ஆசிரியர் முபாரக்!

சற்றுமுன் அடடே... அப்படியா? கல்வி கிரைம் நியூஸ் தமிழகம்
Mubarak - 2026

தர்மபுரி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் படிக்கின்ற எட்டாம் வகுப்பு சிறுமி கடந்த வியாழக்கிழமை தனது தந்தை இங்கே நிற்பதாக வீட்டிற்கு வேனில் சென்ற போது பாதியிலேயே இறங்கியுள்ளார்.

ஆனால், வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை என்ற காரணத்தால் பள்ளிக்கு சென்று பெற்றோர் விசாரித்தபோது, அவர்கள் விபரம் கூறினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் மொரப்பூர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தியதில் பள்ளியில் பணியாற்றி வரும் முபாரக் என்ற ஆங்கில ஆசிரியர் வியாழக்கிழமையில் இருந்து பள்ளிக்கு வரவில்லை என்று தெரியவந்தது.

பின்னர் சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுமியை இருசக்கர வாகனத்தில் முபாரக் கடத்திச் சென்றது தெரியவந்துள்ளது.

சிறுமியிடம் காதலிப்பதாக அவர் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றுள்ளார் என்பது காவல்துறையின் கிடுக்கிப்பிடி விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என்பதை அறிய அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

பள்ளியில் படிக்கும் ஆசிரியரே இப்படி மாணவியை சீரழிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் முபாரக் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + fourteen =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.