பிறந்த தினத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் அணிந்துகொள்ள ஆண்டாள் அணிந்த பட்டு வஸ்திரம் புறப்பாடு..

Published:

பிறந்த தினத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் அணிந்துகொள்ள ஆண்டாள் அணிந்த பட்டு வஸ்திரம் ஸ்ரீரங்கத்திற்கு இன்று கொண்டு செல்லும் நிகழ்வு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் வரும் சித்திரை ரேவதி நட்சத்திரம் திருச்சி ஸ்ரீ ரங்கநாதர் பிறந்த தின நட்சத்திரமாகும் அந்த நாளில் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் அணிந்த பட்டு வஸ்திரம் அணிந்து ரங்கநாதர் ஸ்ரீரங்கத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார் இதற்காக இன்று ஆண்டாள் அணிந்த பட்டு வஸ்திரம் திருச்சி கிளம்பியது

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை ரேவதி நட்சத்திரம் ஸ்ரீரங்க நாதரின் பிறந்த தின நட்சத்திரமாகும் இந்த ஆண்டுக்குரிய சித்திரை ரேவதி ஏப் 29 வெள்ளிக்கிழமை வருகிறது இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை அன்று திருச்சி ஸ்ரீரங்கத்தில் தேரோட்டம் நடைபெறுகிறது அந்த தேரோட்டம் நடைபெறும் போது ஸ்ரீ ரங்கநாதர் ஆண்டாள் அணிந்த பட்டு வஸ்திரம் அணிந்து தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்

இதற்காக ஆண்டாளுக்கு பட்டு வஸ்திரம் அணிவித்து ஸ்ரீரங்கத்திற்கு கொண்டு செல்லும் வைபவம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது ஆண்டாள் ரங்கமன்னார் சர்வ அலங்காரத்தில் காட்சி அளித்தனர் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் ஆண்டாளுக்கு பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து அந்தப் பட்டு வஸ்திரம் ஒரு கூடையில் வைத்து மாட வீதிகள் வழியாக மேளதாளம் முழங்க கொண்டு செல்லப்பட்டு பின்னர் திருச்சி ஸ்ரீரங்கம் கிளம்பியது.

இந்த நிகழ்ச்சியில் நிர்வாக அதிகாரி முத்துராஜா உட்பட கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர் இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன் தலைமையில் கோவில் ஊழியர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

ஆண்டாளுக்கு பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டு ஸ்ரீரங்கம் கொண்டு செல்லும் இந்த வைபவத்தில் திருவில்லிபுத்தூர் மட்டுமன்றி பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

IMG 20220427 WA0097 - 2026
IMG 20220427 WA0092 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img