- 2026

வீட்டின் பின்புறம் கிடைத்த பழையப் பெட்டி.. தம்பதியர் வாழ்வில் அடித்த அதிர்ஷ்டகட்டி‌‌..!

சற்றுமுன் அடடே... அப்படியா? உலகம்
- 2026

வீட்டுக்கு பின்னால் இருந்த துருப்பிடித்த பெட்டிகளை திறந்து பார்த்த தம்பதிக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது..

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்து வரும் தம்பதி, தங்கள் வீட்டிற்கு பின்னால் இருந்த மரங்களுக்கு பின்னால் துருப்பிடித்த நிலையில் இருந்த 4 உலோகப்பெட்டிகளை பார்த்தனர்.

ஆனால் அதை திறக்க எவ்வளவோ முயற்சி செய்த போதும் அவர்களாக திறக்கமுடியவில்லை.. ஒருவழியாக நீண்ட போராட்டத்திற்கு பிறகுக் அந்த பெட்டிகளை திறந்தனர்..

அதில் 52000 டாலர் பணம், தங்கம், வைரமும் இருந்ததை பார்த்து அந்த தம்பதி அதிர்ச்சியடைந்துள்ளனர்..

இதையடுத்து அதை உரியவர்களிடம் ஒப்படைக்க நினைத்த அந்த நியூயார்க் நகர காவல்துறையில் தகவல் தெரிவித்துள்ளனர்..

ஒருபக்கம் காவல்துறையினர் அந்த பெட்டிகளின் உரிமையாளரை தேடிய நிலையில் மறுபுறம் இந்த தம்பதி ஒருபக்கமுமாக தேடி வந்துள்ளனர்.. எனினும் 6 மாதங்களாகியும் பெட்டியின் உரிமையாளர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

எனவே அந்த பெட்டியில் இருந்த பணத்தை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்த முடிவு செய்த காவல்துறையினர், அதனை மனநலம் பாதிக்கப்பட்டோரின் சிகிச்சைக்கு கொடுத்துவிட்டனர்.

மேலும், அந்த தம்பதியின் நேர்மையை பாராட்டும் விதமாக, அந்த பெட்டியில் இருந்த தங்க, வைர நகைகளை காவல்துறையினர் அவர்களுக்கே பரிசாக கொடுத்துவிட்டனர்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.