தெளிந்த நீரில் நீச்சல் அடித்த ப்ளாக் ப்யூட்டி!

Published:

cat 2 - 2026

பூனையின் காப்பாளர் நீர் நிரம்பியுள்ள குட்டையை கடந்து செல்கிறார், அவரை பின்தொடர்ந்து வரும் அவருடைய பூனையும் அந்த குட்டையிலுள்ள நீரில் நீச்சல் அடித்துக்கொண்டே சென்று கரை சேர்ந்து விடுகிறது.

இந்த காட்சி இணையத்தில் பலராலும் விரும்பி ரசிக்கப்பட்டு இருக்கிறது.

பைடெங்பைடன் என்கிற ட்விட்டர் கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், மணற்பாங்கான ஒரு பெரிய நிலப்பரப்பு உள்ளது, அதன் இடையிடையே தெளிவான நீர் நிரம்பிய குட்டைகள் தென்படுகிறது.

அந்த வீடியோவில் மனிதர் ஒருவர் இருப்பதையும், கருப்பு நிற பூனை ஒன்று இருப்பதையும் காண முடிகிறது. அந்த மனிதர் நீர் நிரம்பிய குட்டையை கடந்து கரை பகுதிக்கு செல்கிறார்,

அவரது பின்னால் சென்ற அந்த பூனையும் அந்த நீரினுள் மெதுவாக இறங்கி நீச்சல் அடித்துக்கொண்டே சென்று அந்த குட்டையை கடந்து கரைக்கு சென்று விடுகிறது.

அந்த தெளிவான நீரில் பூனை நீந்தும் காட்சி பார்ப்பதற்கு அழகாக தெரிகிறது, அந்த இயற்கை ததும்பிய இடமும் கண்ணை பறிக்கும் விதமாக அமைந்துள்ளது.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

இந்த வீடியோவில் பூனை நீந்துவதை கண்ட நெட்டிசன்கள் பலரும் பூனையை பாராட்டி வருகின்றனர். இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவை பல்லாயிரக்கணக்கான இணையவாசிகள் பார்த்து ரசித்துள்ளனர்,

இதுவரை இந்த வீடியோவிற்கு முப்பத்தி ஓராயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்துள்ளன, பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img