sbi - 2026

SBI: புதிய சேவை அறிமுகம்!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா லைஃப் ஸ்டைல் வணிகம்
sbi - 2026

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. தற்போது புதிய சேவையை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி யோனோ 2.0 என்ற செயலியை எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல் மற்ற வங்கிகளில் வாடிக்கையாளர்களும் பயன்படுத்த முடியும்.

கூகுள் பே, போன்பே போன்ற மொபைல் ஆப்களுக்கு போட்டியாக தற்போது யோனோ 2.0. ஆப்பை எஸ்பிஐ வங்கி கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது. இந்த செயலியை மிக விரைவில் அறிமுகப்படுத்துவதற்கு எஸ்பிஐ வங்கி அதி வேகமாக செயல்பட்டு வருகிறது.

இதற்கு முன்பு இந்த செயல் 2019 ஆம் ஆண்டில் எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியது. இந்த செயலி எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மட்டும் பயன்படுத்த முடியும். இந்த செயலிக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் அனைத்து இந்தியர்களும் பயன்படுத்தும் வகையில் யோனோ 2.0 ஆப்பை அறிமுகம் செய்வதற்கு எஸ்பிஐ வங்கி தீவிர வேகத்தில் செயல்பட்டு வருகின்றது.

இந்த செயலியில் எளிய டிஜிட்டல் பண பரிவர்த்தனை வசதிகள், பில் கட்டணம் மற்றும் ஷாப்பிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.