images 2022 05 17T130847.562 - 2026

கொடைக்கானலில் மே 24 முதல் 29 வரை மலர் கண்காட்சி..

சற்றுமுன்

குளு குளு கொடைக்கானலில் இந்த ஆண்டு மே 24 முதல் 29ம் தேதி வரை பிரபலமான மலர் கண்காட்சி நடைபெறுகிறது.

கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினசரி வருகை தருகின்றனர். கோடைகாலத்தில் நிலவும் சீதோ‌‌ஷ்ண சூழலை அனுபவிக்க அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள். மேலும் சுற்றுலா பயணிகளை குஷிப்படுத்த கோடைகால குளு, குளு சீசனையொட்டி மலர் கண்காட்சி நடத்தப்படும்.

இந்த ஆண்டு  கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் தோட்டக்கலை துறை சார்பில் மே 24 ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெறுகிறது.மே 24 முதல் ஜூன் இரண்டாம் தேதி வரை கோடை விழா நடைபெறும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன்  தெரிவித்துள்ளார் .

images 2022 05 17T130847.562 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.