dog tiger - 2026

தாயால் கைவிடப்பட்ட புலிக்குட்டிகள்.. நாயின் பராமரிப்பில்..!

சற்றுமுன் அடடே... அப்படியா? உலகம்
dog tiger - 2026

தாயைப்பிரிந்த 3 புலிக்குட்டிகளை நாய் ஒன்று வளர்த்து வரும் பாசப்பிணைப்பு குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீனாவில் தாயைப்பிரிந்த 3 புலிக்குட்டிகளை நாய் ஒன்று வளர்த்து வரும் பாசப்பிணைப்பு பலரையும் கவர்ந்து இழுத்துள்ளது. இதுகுறித்து, இணையத்தில் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

புலியின் தாய் தனது மூன்று குட்டிகளை மிருகக்காட்சிசாலையில் கைவிட்டு, பிறந்த உடனேயே அவற்றுக்கு உணவளிக்க மறுத்துவிட்டது. இதனையடுத்து, நாய் ஒன்று அந்த மூன்று புலிக்குட்டிகளையும் தாய்மை உணர்வுடன் வளர்த்து வருகிறது.

இந்த வீடியோ 117k பார்வைகளையும், 6,800 விருப்பங்களையும்லைக்குகளையும் பெற்றுள்ளது.

இந்த வீடியோவை இணையவாசிகள் பகிந்து, நாய் மற்றும் புலிக்குட்டிகளிடையே காணப்படும் பாசப்பிணைப்பு குறித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.