பிஜேபியில் இணைந்த பிரபல காமெடி நடிகர்!

சற்றுமுன் தமிழகம்
senthil joined bjp 1 - 2026

தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து நாளுக்கு நாள் பிரபலங்கள் தங்களை கட்சிகளில் இணைத்து வருகின்றனர்.

இந்நிலையில், திரையுலகைச்
சேர்ந்தவர்கள் அதிகளவில் பாஜக வில் இணைந்து வருகின்றனர். இன்று பிரபல காமெடி நடிகர் செந்தில், தமிழக பாஜக தலைவர் முருகனை சந்தித்து, பாஜகவில் இணைந்துள்ளார்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் காலத்தில், தமிழகம் முழுவதும் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்த நடிகர் செந்தில், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அதன் பின்னர், ஜெயலலிதா மறைவையடுத்து டிடிவி தினகரனின் அ.ம.மு.க.வில் இணைந்தார். அ.ம.மு.கவில் கட்சியின் அமைப்பு செயலாளராகவும் நடிகர் செந்தில் பதவி வகித்திருந்தார்.

பின்னர், சரிவர பணியாற்றாததால், அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்த நடிகர் செந்தில், தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.

இந்த தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் திமுகவுக்கு எதிராக அவர் பிரச்சாரம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.