கள்ள நோட்டாக பவனி வரும் ரூ.2000.. கும்பலைப் பிடிக்க வியாபாரிகள் கோரிக்கை!

money - 2026

தற்போது புதிய 2,000 ரூபாய் நோட்டு பெரும்பாலும் புழக்கத்தில் இல்லை. இந்நிலையில் அரசு அச்சடித்து வெளியிட்டுள்ள அதே 2,000 ரூபாய் நோட்டு போல ஏராளமான கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருக்கின்றன.

ஈரோடு மாவட்டம், கொங்கலம்மன் கோவில் வீதியில் 200க்கும் மேற்பட்ட மொத்த மளிகை கடைகள், மிட்டாய் கடைகள், எண்ணெய் கடைகள் உள்ளன. அங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் சிறு வியாபாரிகள் மொத்த விலைக்கு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த கடை வீதி கடைகளில் போலி ரூபாய் நோட்டு கொடுத்து மோசடிகள் நடந்துவருகின்றன. இது வியாபாரிகள் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு கிருஷ்ணா தியேட்டர் அருகே ஒரு மொத்த வியாபார மிட்டாய் கடை உள்ளது. அங்கு நகரின் பல பகுதியில் இருந்து வியாபாரிகள் மொத்தமாக மிட்டாய் வாங்கி செல்வது வழக்கம்.

17ந் தேதி மாலை சுமார் 50 வயது மதிக்கத்தக்க வந்த பெண் ஒருவர், 2,000 ரூபாய் நோட்டை கொடுத்து மிட்டாய் வாங்கியுள்ளார். அதேபோல வேறொரு பெண் அதே மிட்டாய் கேட்டு இரண்டாம் ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார்.

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த கடை உரிமையாளர், பணத்தை பரிசோதனை செய்ததில் பெண் கொடுத்த ரூபாய் நோட்டு போலி கள்ள நோட்டு என்பதை கண்டறிந்துள்ளார்.

அப்போது முதலில் பணம் கொடுத்த பெண், மிட்டாய் வேண்டாம் என கூறி பணத்தைக் கேட்டுள்ளார். ஆனால் கடை உரிமையாளர் இருவரிடமும் இருந்த மிட்டாய்களை பெற்றுக்கொண்டு பணத்தை கொடுத்து அனுப்பியுள்ளார்.

இதேபோல மார்கெட்டில் சில கடைகளில் போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்து குறைந்த விலைக்கு பொருட்களை வாங்குவதும் மீதம் ரூபாயைப் பெற்று மோசடி செய்யும் செயல்களும் நடந்துள்ளன.

போலி ரூபாய் நோட்டுகளை கடை வியாபாரிகள் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக முதலில் ஒரு பெண் வந்து போலி ரூபாய் நோட்டுகளை கொடுப்பார். பின்னர் சிறிது நேரம் கழித்து மற்றொரு பெண் வந்து உண்மையான ரூபாய் நோட்டுக்களை கொடுத்து கடைக்காரர்களிடம் பொருள் வாங்குவது போல் வாங்கி பின்னர் பொருள்கள் வேண்டாம் என்று கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவார்.

இதனால் கடைக்காரர் அந்தப் பெண்ணை சமாதானப்படுத்தி அவரிடம் பணத்தை கொடுத்து விடுவார். இந்த சமயத்தை பயன்படுத்தி போலி ரூபாய் நோட்டுக்களை கொடுத்த பெண் சிறிதளவு பொருட்களை வாங்கி கொண்டு நல்ல ரூபாய் நோட்டுக்களை கடைக்காரரிடம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபடுகின்றனர்.

ALSO READ:  சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

மூன்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தனித்தனியாக வந்து இந்த மோசடி செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் கடை வியாபாரிகள் தங்களது வாட்ஸ்-அப் குரூப்பில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி கடைகளுக்கு 2000 ரூபாய் நோட்டுகளை யாராவது கொண்டு வந்தால் அதனை சரி பார்த்து வாங்கிக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் மோசடி கும்பலை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

Entertainment News

Popular Categories