சாலையில் சென்ற மக்களை மிரள வைத்த யானை!

Published:

elephant 3 - 2026

தந்தம் கொண்ட யானை உயரமாக ராஜ நடையிட்டு வந்த வைரல் காட்சி கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது.

வனப்பகுதிக்குள் செல்லும் சாலையில் மக்கள் வழக்கம்போல் பயணித்துள்ளனர். அப்போது, திடீரென வனப்பகுதிக்குள் வெளியேறிய, மிக உயரமான ராட்சத தந்தங்களைக் கொண்ட யானை நடு ரோட்டில் முகாமிட்டது.

அந்த சாலையை விட்டு இறங்காமல் அங்கும் இங்கும் உலாவுகிறது. அந்த நேரத்தில் அந்த சாலையில் பயணித்த மக்கள் யானையை பார்த்தவுடன் மிரட்சியுடன் சாலையிலேயே நிற்கின்றனர்.

இதனை சில வீடியோவாகவும் படம் பிடித்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். டிவிட்டரில் மட்டும் இந்த வீடியோ ஆயிரக்கணக்கானோர் பார்த்து ரசித்துள்ளனர்.

பலரும் யானையை பார்த்து ஆப்பிரிக்க யானைக்கு நிகராக இருப்பதாக கமெண்ட் அடித்துள்ளனர். உண்மையிலேயே அந்த யானை பார்ப்பதற்கு ஆப்பிரிக்க யானைபோல் தான் இருக்கிறது. மிக உயரமாக இருப்பதால், பார்த்தவுடனே பயத்தை வரவழைக்கிறது.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

Related articles

Recent articles

spot_img