விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரம் விலக்கு பகுதியில் 8 லட்சம் மதிப்பிலான 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 3 பேர் கைது: மாவட்ட வட்ட வழங்க அலுவலர் நடவடிக்கை
விருதுநகர் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் அனிதா விற்கு ராஜபாளையம் வழியாக கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் அனிதா தலைமையில் ராஜபாளையம் தனி வட்டாட்சியர் தன்ராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்ட வழங்க அலுவலர் அப்பாதுரை, சிவகாசி வட்ட வழங்க அலுவலர் கோதண்டராமன் ஆகியோர் கொண்ட குழு ராஜபாளையம் அருகே தளவாய்புரம் செல்லும் சாலை விலக்கில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது அந்த வழியாக சென்ற TN 21 AZ 0605 என்ற பதிவு எண் கொண்ட அசோக் லைலாண்ட் லாரி நிற்காமல் சென்றுள்ளது. உடனே சுதாரித்துக் கொண்ட அதிகாரிகள் ஜீப்பில் ஏறி லாரியை ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு துரத்தி சென்று மடக்கி பிடித்தனர.
லாரியை சோதனை செய்த பொழுது கேரளா மாநிலம் எர்ணாகுளத்திற்கு மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து கோழி தீவனம் கொண்டு செல்வதாக போலி பில் தயார் செய்து ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது.
ரேஷன் அரிசி கடத்தல் ஈடுபட்ட லாரியை ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை செய்ததில் திருநெல்வேலி சங்கர் நகர் பகுதியைச் சேர்ந்த தங்கதுரை வயது 41 என்பதும் லாரி உரிமையாளர் மற்றும் டிரைவரும் அவர் தான் என தெரிமவந்தது. அவர் கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தியதை ஒப்புக்கொண்டார் .
மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் அனிதா குழுவினர் தீவிரமாக விசாரணை செய்த பொழுது, ராஜபாளையம் அருகே உள்ள எஸ் .ராமலிங்கபுரத்தில் இருந்து ரேஷன் அரிசியை கடத்தியது மட்டுமல்லாமல் போலியான பில் மூலம் திருமங்கலத்தில் இருந்து கடத்தி வந்ததாக பொய்யான வாக்கு மூலம் அளித்தது கண்டறியப்பட்டது.
இவருக்கு உடத்தையாக செயல்பட்ட வேல்முருகன் மற்றும் காளிமுத்து ஆகியோரையும் மடக்கி பிடித்து மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் அனிதா தலைமையிலான குழுவினர் விருதுநகர் குடிமை பொருள் குற்ற பிரிவு ஆய்வு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.