கண்டுபிடிச்சா கில்லாடி..! ஆப்டிகல் இல்யூஷன் வீடியோ!

color change - 2026

சமீப காலமாக அந்த பக்கம், இந்த பக்கமென்று எந்த பக்கம் திரும்பினாலும் ஆப்டிகல் இல்யூஷன் தொடர்பான ஒரு புகைப்படத்தை அல்லது ஒரு வீடியோவை பார்க்க முடிகிறது.

இன்னும் சொல்லப்போனால், ஒட்டுமொத்த இண்டர்நெட் உலகின் லேட்டஸ்ட் ட்ரெண்ட் என்று கூறும் அளவிற்கு எங்கு பார்த்தாலும் ஆப்டிகல் இல்யூஷன் கான்செப்ட்கள் நிரம்பி வழிகின்றன; ஆனாலும் கூட அவைகள் பார்வையாளர்களை ஒருபோதும் சலிப்படைய வைப்பதில்லை.

ஏனெனில் ஒவ்வொரு ஆப்டிகல் இல்யூஷன் தனக்கே உரிய ஒரு பிரத்யேக கான்செப்டை உட்புதைத்துள்ளது; எனவே எவ்வளவு எண்ணிக்கையில் பார்த்தாலும் கூட அவைகள் ‘போர்’ அடிக்காது!

மேலும் இதுபோன்ற ஆப்டிகல் இல்யூஷனில் மறைந்து இருக்கும் விஷயங்களை கண்டுபிடிப்பதில் மக்களும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இதன் விளைவாக ஆப்டிகல் இல்யூஷனை உருவாக்குவதிலும் பலரும் அதிக ஈடுபாடு காட்டி வருகின்றனர். அதனொரு பகுதியாக, ஒரே ஒரு இளைஞன் வெவ்வேறு வண்ணத்திலான ஹூடிகளை அணிந்துக்கொண்டு, வெவ்வேறு ஐந்து நபர்கள் சேர்ந்து நடனமாடுவது போன்ற ஒரு வீடியோவை உருவாக்கி உள்ளார்.

ALSO READ:  தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

இந்த வீடியோவில் உள்ள உண்மையான இல்யூஷன், “வீடியோவில் நடனமாடுவது ஐவர் அல்ல, ஒரே ஒருவர் தான்!” என்று கண்டுபிடிப்பது அல்ல.

அவர் நடனம் ஆடும்போது அவர் அணிந்துள்ள ஹூடி எப்போது நிறம் மாறுகிறது என்பதைக் கண்டுபிடிப்பதே உண்மையான ஆப்டிகல் இல்யூஷன் ஆகும்.

நடனக் கலைஞரும் வீடியோ எடிட்டருமான கிறிஸ்டியன் கெஸ்னீல் வெளியிட்டுள்ள குறிப்பிட்ட வீடியோவில், அவர் வெவ்வேறு நிற ஹூடியை அணிந்திருப்பதை காணலாம். அந்த ஹூடிகளின் நிறங்கள் ஊதா, நீலம், பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு ஆகும். கிறிஸ்டியனின் ஐந்து வெர்ஷன்களும் நடனமாட தொடங்கியதும் அவர் அணிந்துள்ள ஹூடிகளின் நிறங்கள் “மந்திரம் போட்டது போல” மாறுகின்றன

அதாவது முன்பக்கத்தில் நிற்கும் கிறிஸ்டியன் பச்சை நிற ஹூடி உடன் நடனமாட தொடங்குகிறார். இருப்பினும், ஐந்து கிறிஸ்டியன்களும் சுழன்ற பிறகு, பச்சை நிற ஹூடி அணிந்த கிறிஸ்டியன் மீண்டும் முன்னால் உள்ள இடத்தை நோக்கி நகர்கிறார், இது நெட்டிசன்களின் கண்களை கடுமையாக குழப்புவது மட்டுமின்றி, பலமுறையும் பார்க்க தூண்டுகிறது.

ALSO READ:  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

குறிப்பிட்ட வீடியோவை கூர்ந்து கவனித்தபோது தான், ​​ஹூடிகள் அனைத்தும் மெதுவாக நிறத்தை மாற்றிக்கொண்டிருப்பதை பார்வையாளர்கள் கண்டறிந்தனர்.

நிறங்களின் மாற்றம் மிகவும் படிப்படியாக இருப்பதால், மேலோட்டமாக பார்க்கும் எவராலும் அதை கண்டுபிடிக்கவே முடியவில்லை.

இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 4 மில்லியன் லைக்ஸ்களை பெற்றுள்ள இந்த வீடியோவிற்கு பலரும் பலவகையான கமெண்ட்களை பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.

அதில் ஒருவர், “நண்பா, அந்த நிற மாற்றம் மிகவும் நுட்பமாக இருந்தது, அதை கவனிக்கவே முடியவில்லை. அதை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டியிருந்தது, அதன் பின்னரே ஒவ்வொரு ஹூடியின் நிறமும் மாறுவதை என்னால் கவனிக்க முடிந்தது” என்று கூறி உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

Topics

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories