சிவபதம் அடைந்தது பவானி சங்கமேஸ்வரர் கோவில் யானை வேதநாயகி! பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி!

கோவை சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
bhavani temple elephant died - 2026

பவானி சங்கமேஸ்வரர் திருக்கோவிலில் , சர்வ அலங்காரத் துடன் பவனி வந்த , வேதநாயகி யானை சிவபாதம் அடைந்தது.!

ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோவில் யானை, நீரிழிவு நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அதிகாலை உயிரிழந்தது.

பக்தர் ஒருவரால் 40 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட யானை வேதநாயகி, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட வேதநாயகிக்கு உடலில் ஆங்காங்கே ஏற்பட்ட புண் ஆறாமல் இருந்து வந்துள்ளது.

திருச்சியில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு மருத்துவக் குழு மூலம் முதலில் ஆங்கில மருத்துவமும் பின்னர் இயற்கை மருத்துவமும் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் பலனின்றி உயிரிழந்தது.

வேதநாயகி யானை உயிரிழந்ததை தொடர்ந்து கோயிலின் நடை அடைக்கப்பட்டது. பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் மல்க வேதநாயகிக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். யானையின் பிரிவைத் தாங்காமல் பெண் பக்தர்கள் கதறி அழுதனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.