அண்ணன் சீமான் உப்பு வேணுமான்னு கேட்டதுக்கு வேண்டாம்னு சொல்லிட்டார்… என்று சமையல்காரர் சய்னட் சண்முகம் தனது சாப்பாட்டை குறிப்பெடுத்த குறிப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.
நாம் தமிழர் கட்சியின் சீமான் முன்பொரு காலத்தில், போர்க் களத்தில் விடுதலைப் புலிகள் கம்பீரமாகப் போரிட்ட போது, போர்க்களத்தின் சூழலைக் குறித்து பாடம் எடுப்பதற்கும், எப்படி போரிட்டால் வெற்றி பெறலாம் என்பது குறித்து விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு வகுப்பு எடுப்பதற்காகவும் ஈழம் சென்றார்.
அப்போது, அண்ணன் சீமானுக்கு தம்பிகள் மிகச் சிறந்த கவனிப்பை மேற்கொண்டனர். அண்ணன் சீமான் என்ன சாப்பிடுவார் என்பதை பார்த்துப் பார்த்து செய்தனர்.
இதனை சீமான் மிகவும் பெருமிதம் பொங்க குறிப்பிட்டுள்ளார். தாம் எப்படி சாப்பிட்டோம், எப்படி குறிப்பெடுத்து வைத்துக் கொண்டார்கள், அண்ணனுக்கு எது கொடுக்க வேண்டும் என்றெல்லாம் அந்த வனத்திலும் துக்கத்திலும் துயரத்திலும் நெருக்கடியிலும் நெருக்கத்தை வெளிப்படுத்தினார்கள் புலிகள் என்று பெருமிதம் பொங்கக் குறிப்பிட்டார்.
அண்ணன் சீமான் சாப்பிட்ட விதத்தையெல்லாம் அருகே பின்னால் நின்றிருந்த சமையல்காரர் சயனைட் சண்முகம் மிகவும் கர்ம சிரத்தையாக குறிப்பு எடுத்துக் கொண்டார். சயனைடையே சாம்பாரில் ஊற்றிச் சாப்பிடும் வீரபரம்பரையைச் சேர்ந்த அண்ணன் சீமான், சல்பரையும் சல்பேட்டாவையும் சர்ரென்று உள்ளே லவக்கி விடுபவர் என்பதால், அவருக்காக சிறப்பாக செய்யப் பட்ட உணவுவகைகளை பரிமாறினார்கள்.
அப்போது அண்ணன் சீமான், கத்தரிக்காய் கொஸ்து 2 நக்கு நக்கினார், உருளைக்கிழங்கு மசியலை 3 நக்கு நக்கினார், புடலைங்காய் பொரியலை 2 வாய் எடுத்துக் கொண்டார். நல்லி எலும்பு 3 உறி உறிஞ்சினார். சோறு மட்டும் 28687 எண்ணிக்கையில் எடுத்துக் கொண்டார். கறி குழம்பு கால் லிட்டரும் ஆமை சூப்பு 3 டம்ப்ளரும் சாப்பிட்டார். அண்ணே உப்பு வேணுமாண்ணே என்று கேட்டபோது, அதெல்லாம் சுரணை உள்ளவனுக்குதான்… எனக்கு உப்புல்லாம் வேணாம் என்று சொல்லிவிட்டார் என்று சமையல்காரர் சய்னட் சண்முகம் எழுதி வைத்த குறிப்பு இன்று சமூகத் தளத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. இதைப் பார்த்து சீமானிஸத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் சின்னப் பயலுகள் முதல் நாம் தமிழரில் நக்கிக் கொண்டிருக்கும் நண்டுபிடிப்பான்கள் வரை புளகாங்கிதமடைந்து கொண்டிருக்கின்றனர்.