ஹூ ஹா ஹூ பூனையின் குங்ஃபூ..!

Published:

cat 5 - 2026

வைரலாகி வரும் ஒரு வீடியோவில் பூனைக்குட்டியிடம் அதன் உரிமையாளர் கைகளால் குங்ஃபூ ஸ்டைலில் சண்டை போடுகிறார்.

இணையத்தில் வேகமாக பரவி வரும் இந்த வீடியோவை இணையவாசிகள் பலரும் ரசித்து பார்த்து வருகின்றனர். அதிகப்படியான விலங்குகளின் அற்புதமான வீடியோக்கள் பெரும்பாலும் ட்விட்டர் பக்கத்தில் தான் பகிரப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது இந்த காட்சியும் ட்விட்டரில், வீடியோஸ் ப்ரெசீடிங் லெஜெண்ட்ரீ ஈவண்ட்ஸ் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.

அந்த வீடியோவில், பூனைக்குட்டி ஒன்று சுவற்றின் ஓரமாக அமைதியாக அமர்ந்து இருக்கிறது, அப்போது அதனருகில் உரிமையாளர் சென்று தன் கைகளை வைத்து குங்ஃபூ ஸ்டைலில் பூனையை சீண்டி சண்டை போட முயற்சிக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த பூனையும் அவரை தாக்க தொடங்கியது. இப்படியாக இருவரும் பொழுபோக்காக சண்டை போட்டு கொண்டு இருந்தனர்.

இந்த வீடியோ பார்வையாளர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவிற்கு ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் மற்றும் பல கமெண்டுகள் குவிந்துள்ளன.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Related articles

Recent articles

spot_img