கேரளாவில் துவங்கிய தென்மேற்கு பருவமழை..

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Published:

கேரளாவில் இந்த ஆண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை இன்று (மே 29) தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ந்தேதி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கும் என கூறப்பட்டது. அதாவது மே 23-ந்தேதியே மழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறியும் தென்பட தொடங்கியது. 

அதன்பின்னர் வானிலையில் சற்று மாற்றம் ஏற்பட்டது. பருவமழையின் வருகையை அறிவிக்கும் அறிகுறிகள் தென்படாததால், 30-ந்தேதிக்கு முன்பு மழை தொடங்க வாய்ப்பு இல்லை என இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 3 நாட்கள் முன்னதாகவே பருவமழை தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கேரளாவில் வருகிற 1-ம்தேதி வரை இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் நாளை வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!
images 18 2 - 2026

Related articles

Recent articles

spot_img