சென்னை: சென்னையில் நேற்று ஐபிஎல் போட்டிகளுக்கு எதிரான போராட்டங்களின் போது வன்முறை வெடித்தது. அப்போது பணியில் இருந்த காவலர்கள் கடுமையாகத் தாக்கினர் போராட்டக்காரர்கள். போலீஸார் சிலர் இந்தத் தாக்குதல்களில் கடும் காயம் அடைந்தனர். இந்தக் காட்சிகளை செய்திகளில் பார்த்தவர்கள், போராட்டக்காரர்களின் வேடத்தில் இருந்த சமூக விரோதிகள் மீது கடும் கோபம் கொண்டனர்.
இதனை வன்முறையின் உச்சகட்டம்.. என்று கூறியுள்ளார் ரஜினி. அவர் தனது டிவிட்டர் பதிவில் இதனை வெளிப்படுத்தியுள்ளார். வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான்.இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து.சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும் என்று கூறியுள்ளார் ரஜினி. இது சமூக நோக்கர்கள் பலரது கோப வெளிப்பாடுதான் என்று கொள்ளவேண்டும்.
வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான்.இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து.சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும். pic.twitter.com/05buIcQ1VS
— Rajinikanth (@rajinikanth) April 11, 2018




