விக்ரம் திரைப்படம் வெற்றி விழா-வசூல் ரூ. 300 கோடியை தாண்டி…

Published:

விக்ரம் திரைப்படம் வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் இப்படத்தின் வசூல் ரூ. 300 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘விக்ரம்’. இப்படத்தில், முன்னணி நட்சத்திரங்களான கமல் ஹாசன், பகத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பலர் நடித்துள்ளனர். ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. மேலும் இப்படத்தின் வசூல் ரூ. 300 கோடியைத் தாண்டியுள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கப்படும் எனத் தெரிகிறது. இதைத்தொடர்ந்து சென்னையில் விக்ரம் திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் படக்குழுவினரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ், உதயநிதி ஸ்டாலின், விஜய் சேதுபதி, அனிருத் ஆகியோருக்கு முத்தம் ஒன்றை அன்பு பரிசாக வழங்கினார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!
737303 kiss - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img