images 23 - 2026

மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா..

சற்றுமுன்
images 23 - 2026

மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். துறைசார் வல்லுநர்களுக்கு அவர்களின் சேவையை கெளரவிக்கும் வகையில் நியமன எம்பி பதவி வழங்கப்படுகிறது. கலை, இலக்கியம், விளையாட்டு, உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்கள் மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர். மாநிலங்களவையில் 12 உறுப்பினர்களை குடியரசு தலைவர் நியமனம் செய்கிறார்.

அதன் அடிப்படையில் இசையமைப்பாளர் இளையராஜா, பி,டி, உஷா, வீரேந்திர ஹெக்டே, விஜயேந்திர பிரசாத் உள்ளிட்டோருக்கு நியமன எம்பியாக அறிவித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

இளையராஜா நியமனம் குறித்த அறிவிப்பை பிரதமர் மோடி தமது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். சாதாரண பின்னணியில் இருந்து வந்த இளையராஜா மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார். மனித உணர்வுகளை இசையின் வாயிலாக அழகுற பிரதிபலித்தவர் இளையராஜா என பாராட்டு தெரிவித்துள்ளார்.

1976ல் அன்னக்கிளி படத்தின் மூலம் அறிமுகமான இளையராஜா ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, உள்ளிட்ட இந்த மொழிகள் மட்டுமின்றி ஆங்கில படத்துக்கும் இசையமைத்துள்ளார். சின்பொனி இசைத்து உலக இசைக் கலைஞர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் இளையராஜா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.