சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஆலங்குளம் பகுதியில் உள்ள வளையப்பட்டி கிராமத்தில் துலுக்கன்குறிச்சியை சேர்ந்த தவிட்டுராஜன் (48) என்பவருக்கு சொந்தமான முத்துமீனா பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்று செயல்பட்டு வரும் இந்த பட்டாசு ஆலை 25 க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் சுமார் 10க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வழக்கம்போல பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது உராய்வினால் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார் மேலும் ஒருவர் படுகாயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில் உயிரிழந்தவர் திருவேங்கடம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் வயது 40 மற்றும் காயமடைந்தவர் வெம்பக்கோட்டை காமராஜர் நகர் பகுதியில் சேர்ந்த பவானிஸ்வரன் என்பது தெரியவந்தது.
