விருதுநகர் அருகே ஆண் பெண் இருவர் கம்பியால் அடித்துக் கொலை..

Published:

images 2022 07 25T214547.393 1 - 2026

 விருதுநகர் அருகே பெண் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் விருதுநகர் அருகே பாண்டியன் நகர் காட்டுப்பகுதியில் 35 வயது வயது வாலிபர் கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் அருகே பெரிய பேராலியில் சரஸ்வதி (38) என்ற பெண் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு கொலை.

விருதுநகர் பெரிய பேராலியைச் சேர்ந்தவர் கோபால்.இவர் டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணி புரிகிறார்.இவரது மனைவி சரஸ்வதி.
சுருளிக்கும் அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு நபருக்கும் இடப்பிரச்சினை இருந்திருக்கிறது.இப்பிரச்சனையில் கோபால் மற்றும் சரஸ்வதி சுருளிக்கு எதிர்தரப்பினருக்கு ஆதரவாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அவர் இன்று காலை சரஸ்வதியின் கணவர் கோபால் வேலைக்கு சென்ற உடன் வீட்டிற்குள் சென்று கையில் தயாராய் வைத்திருந்த இரும்பு கம்பியால் 
தலையில் பலமாக தாக்கி உள்ளார்.இதில் காயமடைந்த சரஸ்வதி உயிருக்கு ஆபத்தான நிலையில்  விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து விருதுநகர் ஊரக காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சுருளியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர்

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

இந்த நிலையில் விருதுநகர் அருகே பாண்டியன் நகர் காட்டுப்பகுதியில் 35 வயது வயது வாலிபர் கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது

விருதுநகர் அருகே பாண்டியன் நகர் காட்டுப்பகுதியில் அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ரத்த காயங்களுடன் மீட்கப்பட்டது.கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பாண்டியன் நகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த இரு கொலைகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img