அரசியலில் குதித்தார் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன்: ஈ.வி.கே.எஸ். முன்னிலையில்!

Published:

powerstar-srinivasan சென்னை : நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் திடீரென அரசியலில் குதித்தார். தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலையில் அவர் தனது அரசியல் பிரவேசத்தைத் தொடங்கியுள்ளார். வழக்குரைஞர் பால் கனகராஜ் நடத்தி வரும் தமிழ் மாநிலக் கட்சியில் அவர் திடீரென இணைந்துள்ளார். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால் கனகராஜ் தொடங்கிய தமிழ் மாநில கட்சியின் 2-ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் தண்டையார்பேட்டை ஏ.இ.கோவில் தெருவில் நேற்றிரவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் நிறுவன தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் திடீரென மேடை ஏறிய நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், தான் தமிழ் மாநிலக் கட்சியில் இணைவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு கட்சி நிறுவனர் ஆர்.சி.பால்கனகராஜ் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் இளங்கோவன் பேசியபோது…. ஆர்.சி.பால்கனகராஜ் ஆரம்பித்த தமிழ் மாநில கட்சியில் சட்டத்துறையை சார்ந்தவர்கள் மட்டுமின்றி ஏராளமான இளைஞர்களும் சேர்ந்திருப்பதைக் காணமுடிகிறது. ஊழலை ஒழிக்க முன்னெடுத்து நடத்தும் இவர்களது போராட்டத்துக்கு காங்கிரசின் ஆதரவு நிச்சயம் உண்டு… என்றார். தமிழ் மாநில கட்சியின் தேர்தல் சின்னமாக ‘சங்கு’ சின்னத்தை தேர்ந்தெடுத்துள்ளதாக கட்சி நிறுவனர் ஆர்.சி. பால் கனகராஜ் அறிவித்தார். [su_permalink id=”2480″][/su_permalink]

Related articles

Recent articles

spot_img