45 பேர் உயிருடன் எரித்துக் கொலை: ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் வெறிச்செயல்

Published:

ISIS ஈராக்கில் 45 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளால் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈராக்கின் மேற்கு மாகாணமான அன்பாரில் இந்தக் கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் இவ்வாறு எரித்துக் கொன்றவர்களில் பெரும்பாலானோர் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக, ஊடகங்களில் தெரிவிக்கப்பட்ட செய்தியில், போலீஸ் அதிகாரி கர்னல் காசிம் அல்-ஓபெய்டி தெரிவிக்கையில், 45 பேர் மேற்கு அல்-பாக்தாதி நகரில் எரித்துக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள் அல்பு-ஒபிட் சன்னி பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்தவர்கள், இவர்களில் போலீசாரும் அடங்குவர் என்றார். ஒவ்வொரு நாளும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் வெறிச்செயல்கள் அதிகரித்து வருவது, உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்பார் மாகாணத்தில் 80 % பகுதி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடிக்குள் வந்துவிட்டது. அமெரிக்கப் படையைச் சேர்ந்த வீரர்கள் இந்தப் பகுதியில், ஈராக் படைப்பிரிவுக்கும் ஈராக் ராணுவத்தின் துணைப் படைப்பிரிவுகளுக்கும் பயிற்சி அளித்து வருகின்றனர். [su_youtube url=”https://youtu.be/Wzf_E9B1UUE”]

ALSO READ:  FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

Related articles

Recent articles

spot_img