flag - 2026

தேசியக் கொடிகளை  ஆர்வத்துடன் விற்கும் அஞ்சல் துறை ..

சற்றுமுன்

11நாட்களில் 1 கோடிக்கும் மேல்தேசியக் கொடிகளை அஞ்சல் துறை விற்பனை செய்துள்ளது.

இந்திய அஞ்சல் துறை மூலம் 11 நாட்களுக்குள் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் மற்றும் இணையதளம் வாயிலாக குடிமக்களுக்கு 1 கோடிக்கும் அதிகமான தேசியக் கொடிகளை விற்பனை செய்துள்ளது என்று தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தேசியக் கொடி ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இணையதளத்தின் மூலம் பதிவு  செய்பவர்களுக்கு இலவசமாக தேசியக் கொடிகள் விநியோகிக்கப்படுகிறது.

இணையதளம் மூலம் இதுவரை 1.75 லட்சம் தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. நாடு முழுவதும் இருக்கும் குடிமக்களுக்கு தேசியக் கொடிகளைக் கொண்டு செல்வதே எங்கள் இலக்கு என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கு நாடு முழவதும் 4.2 லட்சம் அஞ்சல் ஊழியர்கள் உதவி செய்கிறார்கள் என தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

flag - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.