images 83 - 2026

இலங்கையில் எல்லை தாண்டி மீன்பிடித்த 9 நாகை மீனவர்கள் விடுதலை…

சற்றுமுன்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 10ம் தேதி கைதாகி இலங்கை சிறையில் இருந்த 9 நாகை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 6ம் தேதி கீச்சாங்குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் 9 பேர் நாகை துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கு நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர்,  எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தை சேர்ந்த காமராஜ், பூவரசன், அன்பு, அக்கரைப்பேட்டையை சேர்ந்த செல்லையன், பாலு, செல்லதுரை ,முருகானந்தம் ,ஸ்டீபன்,  முருகன் ஆகிய 9 பேரையும் கைது செய்து, அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

கைதான மீனவர்கள் திரிகோணமலை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர், கைது செய்யப்பட்ட மீனவர்கள் 9 பேரையும் ஆகஸ்ட் 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதேபோல், கடந்த 22ம் தேதி நாகை மாவட்டம் அக்கரைப்பட்டியிலிருந்து 10 பேர் கொண்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். அவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது மீண்டும் அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, மீனவர்கள் 10 பேரையும் கைது செய்து, அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர், கைது செய்யப்பட்ட மீனவர்கள் 10 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், அவர்களுக்கு செப்.6ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், கடந்த 10ம் தேதி கைது செய்யப்பட்ட மீனவர்கள் 9 பேரின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் அவர்களை திரிகோணமலை நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவிட்டது.

images 83 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.