விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு..

Published:

images 88 - 2026

சென்னையில் இருந்து துபாய் செல்லும் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதனையடுத்து விமானத்தில் தீவிர சோதனை நடைபெற்றது.

இன்று காலை 7.20 மணிக்கு சென்னையில் இருந்து துபாய் செல்லவிருந்தது இண்டிகோ விமானம். அந்த விமானத்தில் 167 பயணிகள் இருந்த நிலையில் விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்படது. விமான நிலைய காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி மிரட்டலைத் தொடர்ந்து விமானத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், விமான நிலையத்திற்கு வந்த தொலைபேசி எண்ணை கண்டறிய விசாரணைகள் நடந்து வருகிறது.

இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img