சட்டப் பேரவையில் இருந்து டாக்டர் கிருஷ்ணசாமி வெளிநடப்பு

Published:

dr-krishnasamyசென்னை: தமிழக சட்டப் பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஒரு பிரச்னை குறித்துப் பேச வாய்ப்பு கேட்டார். ஆனால் அவைத்தலைவர் அதற்கு அனுமதி மறுத்தார். ஆளுநர் உரை மீது நீங்கள் பேசும்போது, உங்கள் பிரச்னைகள் குறித்துச் சொல்லலாம் என்றார். இதை ஏற்க மறுத்த டாக்டர் கிருஷ்ணசாமி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். அதன் பின்னர் அவை வளாகத்தில் வெளியே காத்திருந்த செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே 2 பள்ளி மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்துப் பேச முற்பட்டேன். நேற்றும் இன்றும் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. கவன ஈர்ப்புத் தீர்மானமும் கொடுத்து இருந்தேன். இது பற்றிப் பேச வாய்ப்பு கொடுக்காததால் வெளிநடப்பு செய்தேன்’’ என்று தெரிவித்தார்.

Related articles

Recent articles

spot_img