புது தில்லி : ஹிந்துத்துவா கொள்கைகளை தீவிரமாக கடைபிடிப்பவர்களின் சர்ச்சைக்குரிய கருத்துகளால்தான் தில்லி தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார். இது குறித்து வியாழக்கிழமை இன்று ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்… பாஜக தனது அடித்தளத்தை இன்னும் விரிவடையச் செய்ய வேண்டும். மேலும், தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களையும் வகுக்க வேண்டும். இப்போது பாஜகவுக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் தில்லியில் நடைபெற்ற தேர்தலில், கட்சி அடைந்த தோல்விக்கு வேறு சில காரணிகளும் உள்ளன. அதற்கு, கிரண் பேடியை மட்டும் காரணமாகக் கூற இயலாது. எங்களின் சகாக்கள் என்று அழைக்கப்படும் சிலர் வெளியிட்ட சில கருத்துக்களும் பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள், சிறுபான்மையினரை ஒட்டுமொத்தமாக ஓரம் கட்டி விட்டனர். அதுவும் நாங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்று கூறியுள்ளார்.
சர்ச்சைப் பேச்சுகளால் பாஜகவுக்கு பாதிப்பு: தில்லி தோல்வி குறித்து வெங்கய்ய நாயுடு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari